கலை பொக்கிஷத்தை பாதுகாக்க ஒரு பயணம்..
ஆயிரக்கணக்கான நம் முன்னோர்கள் சேர்ந்து, நமக்காக கட்டிகொடுத்த கோவில். இதில் அதிக உழைப்பு, அயரில்லா தொண்டு, தெவிட்டாத கலைநயம் போன்ற அதனை சிறப்பம்சம் பொருந்திய பண்டைய கால பொக்கிஷம். நம் முன்னோர்கள் இதற்க்கு உழைத்த உழைப்பை விட நாம் காப்பாற்ற தேவைப்படும் உழைப்பு சிறிது தான்.
சோழர்களைப் பற்றி நாம் படித்த பல தகவல்கள் அனைத்தும், நம் மெய்சிலிர்த்துப் போனவயாய் இருந்துள்ளது. அப்படிப்பட்ட வம்சத்தில் வந்த மன்னன் கட்டிய செஞ்சி அருகில் உள்ள " தேவனூர் மகாதேவர் "
கோயில் இன்றைக்கு இப்படியொரு நிலையில் உள்ளது!. சென்ற வாரம் நாங்கள் இந்த இடத்தை சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இதை சுத்தம் செய்ய தீர்மானித்தோம். அதற்க்கான முதற்கட்ட பணிகளை வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி தொடங்குகிறோம். தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு ஊரிலேயே ஏற்பாடு செய்து தருவதாக ஊர் தலைவர் உறுதி அளித்துள்ளார்.இதை அனைத்தும் எங்கள் அலுவலக வேலை செய்தது போக ,எங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நாட்களில் !அன்புள்ளம் கொண்ட உங்களில் யாரேனும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய தொலைபேசி என்னை தெரியப்படுத்துங்கள், நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்.

நம்மை விட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மை விட அதிக கவனம் செலுத்தி இது போன்ற கலை பொக்கிஷங்களை எழுப்பியுள்ளனர்.இது நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து, இதை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமை. ஒரு கல்லை சீர்செய்தாலும் அது நமது முக்திக்கு படியாக அமைந்து அந்த இறைவனிடம் நம்மை அழைத்துசெல்லும். மீண்டும் இது பழைய கம்பீரமான அழகை பெற்று காட்சியளிக்க உங்களுக்கு ஆசையாய் இல்லை
யா ? இதை விட நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு வேறு என்னவாக இருக்க முடியும் ?
தேவனூர் இருக்கும் இடம் பற்றிய சிறிய வரைபடம் இதில் இணைத்துள்ளேன்
ஐரோப்பாவில் நூறு வருட பழமை வாய்ந்த தேவாலயங்களைக் கூட தூசி படாமல் பொத்திபொத்தி பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் ,அந்த தூண்களில் உள்ள கலைநயத்தை பாருங்கள் வருடங்களைக்கடந்தாலும் அதன் அழகை அப்படியே வைத்திருக்கும் இடத்தின் இன்றைய அவலமான நிலை " செஞ்சி" அருகே உள்ள " தேவனூர் மகாதேவர் கோயில் " , நேற்றைக்கு உங்கள் பகுதியில் இதுபோன்ற ஏதாவது இருந்தால் புகைப்படங்களை அனுப்புங்கள் என நான் கூறி இருந்ததை பார்த்த ஒரு நண்பர் என் மின்னஞ்சலுக்கு அனுப்பினார் , இதற்கு தீர்வாக என் நண்பர்கள் அனைவரும் , அடுத்த வாரம் இந்த இடத்திற்கு சென்று பார்வை இட திட்டமிட்டுள்ளோம், இதை சுத்தப்படுத்த என்னென்ன பொருட்கள் தேவை ?, எத்தனை நாட்கள் தேவை ?, ஊரில் உதவுவதற்கு யார் உள்ளார்கள் ? உணவு, குடிநீர், போன்ற விடயங்களை ஆராய திட்டமிட்டுள்ளோம் ! அனைத்து ஏற்பாடுகளும் முடிந்ததும் அதன் மறுவாரமே சென்று சுத்தப்படுத்தி அந்த கிராமத்தினருக்கு இதன் அருமைகளை உணர்த்தி மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ! விரைவில் இதன் புதுப்பிக்கப்பட்ட படம் இதே முகநூளில் வெளியிடுகிறோம் ! . நன்றி!.

—
Hi, cool post. I have been thinking about this topic,so thanks for sharing. I will probably be subscribing to your blog. Keep up great writing!!!
ReplyDelete1988 Jeep Comanche AC Compressor
thank friend
Delete