Like me

Saturday, March 24, 2012

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பூனாவில் போராட்டம்


         கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் இன்று (23/03/12) ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு போராட்டத்தில் பூனாவில் உள்ள லோகாயத் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 35 போராளிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பூனா மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் எதிரே நடைப் பெறுகிறது. இவர்கள் மகாராஷ்டிரா மாநில ஜைதாபூர் அணுஉலைக்கு எதிராக பல நாட்களாக போராடி வருபவர்கள். அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் இது போன்ற போராளிகள் கூடங்குளத்தில் இப்போது போராளிகள் சந்தித்திருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் போராட்டக்க் காரர்களுக்கு உறுதுணையாக தாங்கள் இருப்போம் என்று இந்த ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இந்த போராட்டம் இடிந்தகரை போராட்டத்திற்கு மேலும் வலு சேர்பதாக அமைந்துள்ளது.



No comments:

Post a Comment