
பயனுள்ள வேலை என்பது மன அமைதிக்கு ஒரு மருந்து :-
எப்பொழுதும் ஏதாவது பயனுள்ள, நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்கள். இதை செய்யலாமா? அதைச் செய்யலாமா? என நேரத்தை வீணாக்காதீர்கள். இதனால் பயனற்ற மனப் போராட்டத்தில் நீங்கள் நாட்கள் வாரங்கள், மாதங்கள், என் வருடங்களைக் கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய்விடுவீர்கள். அதிகமாக திட்டங்களைத் தீட்டாதீர்கள். திட்டம் போடுவது அந்த இறைவன் தான். எப்பொழுதும் ஏதாவது நல்லதையே செய்து கொண்டிருங்கள். ஆக்கப் பூர்வமான உங்கள் காரியத்தில் இடைவெளி எதுவும் இருக்க வேண்டாம். ஒரு சில கவனக் குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களை கீழே தள்ளிவிடும். காலமே வாழ்வு. நேரத்தை பொன் போலப் பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவிடுங்கள். நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள் ஜபம், மானசீக பிரார்த்தனை மற்றும் ஏதாவது பயனுள்ள நூல்களைப் படிப்பதில் ஈடுபடுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில்தான் ஆரம்பிக்கிறது. கடும் சொற்களும், தீய செயல்களும் மனதில்தான் உதிக்கின்றன. எனவே ஆரம்ப ஸ்தானத்தைச் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்வாகிய நதி மிகப் பெரிய மன நிம்மதியுடன், படிகம் போல தூய்மையாகப் பாயும்.
No comments:
Post a Comment