Like me

Saturday, March 17, 2012

இந்தியா காப்பாற்றுமா.....................?

         
             தெரியாமல் இராமர் தேரையைக் கொன்றார்! தெரிந்தே இந்தியா ஈழத் தமிழரைக் 
                                                      கொன்று குவித்தது! 
       இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காகத் தன்னி டம் இருந்த அம்பை நிலத்தில் ஊன்றிவிட்டு நீரா டச் செல்கிறார். இராமர் அம்பை நிலத்தில் ஊன்றிய போது நிலத்தின் கீழ் இருந்த தேரையை அம்பு குத்தி விடுகிறது. நீராடிவிட்டு வந்த இராமர் நிலத்தில் தான் ஊன்றி வைத்த அம்பை இழுக்கிறார். அம்பின் நுனியில் குத்துண்ட தேரை துடிக்கிறது. நிலைமையைஅவதானித்த இராமர் ‘தேரையே நாம் அம்பை குத்தும் போது நீ கூப்பிட்டிருக்கலாம் அல்லவா? ’என்று கூறுகிறார்.

அம்பில் குத்துண்டு வலிதாங்க முடியாமல் துடிக்கும் தேரை இராமரை பார்த்து கூறுகின்றது. ‘இராமா! எனக்கு யார் துன்பம் செய்தாலும் நான் இராமா... இராமா... என்றுதான் உச்சாடனம் செய்வேன். அந்த இராமரே என்னைக் குத்தும் போது நான் யாரைக் கூப்பிடுவேன்.’ இவ்வாறு கூறியடியே தேரையின் உயிர் பிரிந்தது. இதுதான் ஈழத்தமிழர்களின் நிலையும். இலங்கை அரசுகள் தமிழ் மக்களுக்கு காலாகாலமாக பெரும் கொடுமைகள் செய்த போதெல்லாம் இந்தியா காப்பாற்றும் என்று இந்தியா... இந்தியா... என்று தமிழர்கள் உச்சாடனம் செய்தனர். ஆனால் அந்த இந்தியாவே ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி சங்காரம் செய்துவிட்டது. என்ன செய்வது! இராமா... இராமா... என்று உச்சாடனம் செய்த தேரையை இராமர் அறியாமல் குத்தினார்.

ஆனால் இந்தியா... இந்தியா... என்று உச்சாடனம் செய்த தமிழர்களை இந்தியா திட்டமிட்டே கொன்றது. இப்போது கூட ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்ப்பதே இந்தியாவின் நிலைப்பாடு. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இப்போதும் இந்தியா... இந்தியா... என்று உச்சாடனம் செய்கிறது. ஐந்தறிவு படைத்த தேரையால் இராமரை புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால் ஆறறிவு படைத்த தமிழ்த் தேசியக் கூட் டமைப்பால் இன்னமும் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஓ! இந்திய தேசமே! எங்கள் நாட்டை சிதைத்துவிட்டு! எங்கள் உயிர்களைப் பறித்துவிட்டு! எங்கள் வீட்டை உடைத்து விட்டு! எங்களுக்கு நீ வீடுகட்டி கொடுப்பதாக உன் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதை விடச் சின்னத்தனம் வேறு எதுவும் இல்லை. இறைவா! ஜெனிவா தீர்மானத்தை இந்தியா எதிர்த்தால், இந்தியா எங்களுக்கு வீடுகட்டித் தரத்தேவையில்லை என்று கூறும் சக்தியை எம்மவர்களுக்குத் தா அது போதும்.
 

No comments:

Post a Comment