
இலங்கைப் போர்க்குற்றம் - சுயாதீனமான விசாரணை தேவை அன்றேல் இலங்கை
தூதர் வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான்
புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என்ற ஆவணத்தில்,
ஐ.நா.வின் உணவு வழங்கும் குழுவினர் மீதும் குண்டுகளை வீசி, கொன்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள், அதோடு பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் என்று அறிவித்த பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி அந்த வளையத்தில் இருந்த மக்களை அழித்துள்ளார்கள். இந்த செயல்களை செய்தவர்கள் அனைவரும் அதாவது போர்க்குற்றங்களை அரங்கேற்றியவர்கள் அனைவரும் இன்று இலங்கை அரசின் மிக உயர்ந்த பதவியில் அமர்ப்பட்டுள்ளனர் என்றார் லீ.
ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் டி.எஸ்.ஜி.சமரசிங்கே கூறியது போல இலங்கை அரசே நடத்திய L L R C யின் விசாரணை அறிக்கை போதுமானதாக இல்லை அதாவது நேர்மையற்றவையாக உள்ளன. தற்பொழுது உலகில் இவர்கள் கூறுகின்ற இந்த அறிக்கை பொய்களையும் புனை சுருட்டுக்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளன. இந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவின் ஜில்லார்ட் அரசு உலக அரங்கிற்கு அழைப்பு விட வேண்டும், ஐ.நா.வின் நிபுணர் குழு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இன்டர்நேஷனல் கிரைசிஸ் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பு குழு போன்றவைகளை கொண்டு நேர்மையான சுதந்திரமான விசாரணை நடத்திட வேண்டிய தருணம் இது என்று கூறுகிறார் செனட்டர் லீ ரைனான்.
ஆஸ்திரேலியா அரசு உறுதியாக ஆதரிக்க வேண்டும் அமெரிக்க அரசு கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்த வார இறுதியில் நடைபெறும் மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் குறித்த ஆதரவு ஆஸ்திரேலியா அரசின் கடமைகளில் ஒன்று மேலும் சுயாதீனமான விசாரணைக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வலியுறுத்துவதின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
செனட்டர் லீ ரைனான் உறுதிபட கூறி வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜில்லார்ட் இலங்கை அரசிடம் கூற வேண்டும் இவ்வாறு, இலங்கை அரசை கூப்பிட்டு அய்யா, உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள், சுதந்திரமான நேர்மையான சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து முழு விசாரணை அறிக்கை அளிக்கும் வரையில் உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் கூற வேண்டும் என்கிறார் லீ. இலங்கை அரசு இந்த உடன்பாட்டுக்கு, கோரிக்கையை ஏற்கவில்லையெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் அட்மிரல் டி.எஸ்.ஜி.சமரசிங்கே அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் செனட்டர் லீ ரைனான்.
No comments:
Post a Comment