Like me

Wednesday, March 14, 2012

சிறிலங்காவின் பறக்கும் படை !

                

                                                  சிறிலங்காவின் பறக்கும் படை ! 



ஐ.நா மனித உரிமைச் சபை தொடர்பில் சிறிலங்காவைச் சூழ்ந்துள்ள அச்சமேகத்தை போக்கும் நோக்கில், சிறிலங்கா அரச தரப்பினர் தொடர் பறப்புக்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்காவின் வெளிவிவாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சவுதி அரேபியாவூடாக அரபு நாடுகளை வளைத்துப் போடும் முயற்ச்சியாக தற்போது சவுதி அரேபியாவில் முகாமிட்டுள்ளார்.

மறுபுறம் இன்று செவ்வாய்கிழமை , சிறிலங்காவில் இருந்து ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி மகிந்த சமரசிங்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவொன்று ஜெனீவாவுக்கு புறப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, இந்தியாவில் இருந்து ஜெனீவா புறப்பட்டுள்ளார்.

பிந்திய செய்தியொன்றில் சவுதியில் இருந்து சிறிலங்கா திரும்பியுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிசும் ஜெனீவாவுக்கு செல்கின்றார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் 120க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சரிபாதி பேர் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் என நம்பகமான ஜெனீவாச் செய்திகள் தெரிவிப்பதோடு இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தமிழர்களை கண்காணிப்பதும் அவர்களின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதுமாக உள்ளதென அறியமுகின்றது. 

No comments:

Post a Comment