Like me

Sunday, March 4, 2012

துப்பாக்கி முனையில்




துப்பாக்கி உளி
உடல் சிதைப்பு
உயிர் பிரிப்பு
பிணச்சிலை பிறப்பு

மென்மை உடலின்
இரத்தமே வண்ணம்
கத்தி தூரிகை
களமெங்கும் சிவப்போவியம்

சிங்களனின் மங்கள இசை
தமிழனின் மரண ஓலம்
கொலையினில் கலை
சிங்களனும் கலைஞனோ!
ஈழம் தமிழ்ப்போர்க்களம்
சிங்கள கலைக்களமோ!

" என் இறுதி குருதியும்
வழிந்தோடுகிறது
என்னுறுதி எனைவிட்டு
ஓடவில்லை!
என் இறுதி அணுவும்
இறக்கக்கூடும்
என் கொள்கை
இறவாமலிருக்க!
ஆசை அறுத்த புத்தன் முன்னே
உயிரை அறுக்கிறாய்!
காகித பூவைப்போல
கற்பை பறிக்கிறாய்!
மண்மீது யாம்கொண்ட
உண்மைக்காதலை அழிக்கிறாய் !
இவைசெய்து களியாடிதாம்
மனிதநென்பதை மறக்கிறாய்!
நான் இறக்குமுன்னே இதைக்கேள் !
களத்தில் இரத்தம் விதைத்துவிட்டோம்
உடல் சிதைத்தினும் தினையாய் வளர்வோம்!
உயிர் அறுப்பினும் நெல்லாய் முளைவோம்!
அதையுண்ணும் உன்னுடலில் சதையாய் இருப்போம்!
இங்கே தமிழழிக்கும் உன் தலைக்கனம்
உன் உடல் அழிக்குமோ!
தமிழை பிரிக்க உன்னுயிர் பிரிக்குமோ!
உன்னினைவின் மறைவுவரை மறவாதே!
நீ எம்மையழிப்பினும்
நீரே அழிந்தினும்
தமிழ் அழியாது!"
என தமிழ்வீரன்
உரைத்து இறக்கிறான்
இரத்தமாய் விதைகிறான்!
எங்கள் இயலாமையை
தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பி மீண்டும்
மீண்டும் எங்களை
காய காயப்படுத்தாதீர்கள்.....
ஏற்க்கனவே முள்வேலிக்குள்
தான் இருக்கிறோம்......
காயம் இன்னும்
ஆறவில்லை
வலியோடுதான் இருக்கிறோம்.......
இன்னும் துப்பாக்கி முனையில்
பாதுகாப்பாய் இருக்கிறோம்.......


No comments:

Post a Comment