
இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது - பிரணாப் முகர்ஜி
''இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது'' என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவை இன்று காலை கூடியதும் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படம் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்து அரசு விழிப்புடன் உள்ளது என்றார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்றும் இது பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவு
இப்பிரச்சனையில் இன்னும் முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது என்று கூறிய பிரணாப், சாதாரணமாக எந்த நாட்டு தீர்மானத்திற்கும் ஆதரவு அளிக்கப்படுவதில்லை என்றார்.
No comments:
Post a Comment