
நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொலைகார மகிந்தாவிற்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு!..
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றும் படி ஆசி வேண்டி தமிழ் மக்களின் முக்கிய இராசதானிகளில் ஒன்றான நல்லூரில் தமிழ் மக்களின் முக்கிய தலங்களில் ஒன்றான நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலயத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு வேண்டி நடத்தப்பட்ட இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வு இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நாகவிகாரையிலும் ஜனாதிபதியை பாதுகாக்கும் பொருட்டு விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. பெளத்த பிக்குகள் ஜனாதிபதியை காப்பாற்றும்படி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வை தமிழ் பௌத்த சங்கம், முப்படையினர் மற்றும் நாளைய இளைஞர் அமைப்பு என்பன ஏற்பாடு செய்திருந்தன. நல்லூர் கந்தன் ஆலயத்தில் காலையிலும் நாகவிகாரையில் மாலையிலும் இந்தப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதன் பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும்படி பிதார்த்திக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தினரும் காவல்துறையினரும் பெருமளவில் தமிழ்மக்கள், அரச ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment