Like me

Sunday, April 1, 2012

மத்திய அரசு விளக்குமா ?

                                    

    கூடங்குளம் போராட்டக்காரர்களின் மேல் () துரோக வழக்கு ()தேசத்துக்கு எதிரான சதி செய்தல், () அதற்காக ஒரு இடத்தில் பதுங்கி இருத்தல் என்பது மாதிரியான வழக்கு போட்டு இருக்கிறார்கள். சாத்வீகமான போராட்டத்தை நடத்திய சாதாரண மக்களின் மீது இம்மாதிரியான வழக்குகளையும் போட முடியும் என்கிஓர இம்மாதிரியான நிலைமை நாளைக்கு எந்த மக்களும் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவே முடியாது என்கிற சர்வாதிகாரத் தனத்துக்கு நாட்டை இட்டு செல்லும்.

ஒரு மின்சார உற்பத்தி நிலையத்தை எதிர்த்ததற்கு இப்படியான வழக்கா ? இப்போது புதிதாக சொல்லுகிறார்கள் , இந்த போராட்டம் தேச பாதுகாப்புக்கு எதிரானது என்று? அப்படியானால் கூடங்குளத்தில் இவர்கள் தயாரிக்கப் போவது மின்சாரமா இல்லை அணுகுண்டா ? மத்திய அரசு விளக்குமா ?



Infant Heartly 
மிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் பெரும்பாலானவை பணம் கொடுத்து, பல்வேறு தகாத காரியங்களைச் செய்வதால் வெற்றி பெறுவதாக அறிவிக்கப் படுகின்றன.

அவ்வாறு நடைபெறாத போராட்டமாக இருந்தாலும், இரண்டு மணி நேரமோ, அல்லது மூன்று மணி நேரமோ, போராட்டத்தை நடத்தி அதை முடித்து விட்டு அறிக்கை விடும் போராட்டங்களையே தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வந்துள்ளன.

இடதுசாரிக் கட்சிகள் கூட, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. ஒரு மணி நேர ஆர்ப்பாட்டமோ, அல்லது, இரண்டு மணி நேர தர்ணாவோ நடத்தினால், போதும் என்ற மனநிலைக்கு அக்கட்சிகளின் தொண்டர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

இந்நிலையில், ஏழு மாதங்களாக தொடர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தி, அந்தப் போராட்டத்தை காவல்துறையின் உதவியோடு முறியடிக்க அரசு திட்டமிட்ட நிலையில், அதைக் கண்டு அஞ்சாது, தொடர்ந்து போராட்டம் நடத்தி, இறுமாப்போடு திரிந்து தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வைத்து, இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்று, இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும், அன்புத் தோழர் உதயக்குமார் மற்றும், அவரோடு இருக்கும் அத்துணை தோழர்களுக்கும் சவுக்கின் வாழ்த்துக்கள்.






No comments:

Post a Comment