
தமிழர்களுக்கிடையில் பிரிவினையை தூண்ட ஒட்டுக்குழு டக்ளஸ் நேரடியாக களமிறக்கம்- பூங்குழலி
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து எச்சரிக்கும் வகையில் மே மாதம் 5 ஆயிரம் மீனவர்களுடன் இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கடலில் வைத்து ஒரு எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினையை தூண்டிவிட சிறீலங்காவினால் தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முதற்கட்ட நடவடிக்கையினை நேற்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் ஆரம்பித்துள்ளார்.
சிறீதர் திரையரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் மேற்குறித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
அதாவது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்தியத் தமிழர்களுக்கு எச்சரிக்கும் வகையில் அடுத்த மாதமளவில் சுமார் 5 ஆயிரம் மீனவர்களுடன் இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கடலில் வைத்து ஒரு எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1000 படகுகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இதற்கு நானே தலைமை தாங்குவேன் எனவும் டக்ளஸ் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவைகள் மீனவர் பிரச்சனை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் இராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என ஒட்டுக்குழு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராமேஸ்வரத்தில் தைரியம் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தி பார்க்கட்டும் என்று தமிழக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களை தமிழர்களுடன் மோதவிடும் சூழ்ச்சியை தற்போது சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ஆயுதமாக கையில் எடுத்திருப்பது வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த நகர்வுகளை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment