Like me

Sunday, April 1, 2012

ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடி விபத்து நிகழ்ந்து ஓராண்டு


ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடி விபத்து நிகழ்ந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகுஷிமா அணுமின் நிலையத்தின் 2ஆவது அணு உலையை சிறிய கேமிரா, கதிர்வீச்சை கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை அடங்கிய கருவி மூலம் ஆய்வு செய்தபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும் அணு உலை மிகவும் சிதிலமடைந்திருப்பதாகவும், உயிரைக் கொல்லும் அளவைவிட 10 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். கதிர்வீச்சு நிறைந்த இந்த அணு உலையை செயலிழக்கச்செய்ய 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கூறிய ஜப்பான் அதிகாரிகள், நிலைமையை சீர்செய்ய ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர். இதேபோன்று அணுஉலையை குளிர்விக்க போதிய அளவில் தண்ணீர் இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

No comments:

Post a Comment