அணு உலையால் தமிழ் இனத்திற்கு மரணம் !!!
கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிப்பது அல்ல முக்கிய வேலை. இங்கே அணு ஆயுதங்களுக்கான யுரேனியம் தயாரிக்கப் போகிறார்கள். வல்லரசாக வேண்டும் என்கிற உத்வேகத்தில் ஆயதப் போட்டியில் இறங்கப் போகிறார்கள். மிக ஆபத்தான ஆராய்சிகளை (அணுகுண்டு ) செய்வதற்கு கூடங்குளம் பயன் பட போகிறது . மற்ற படி மின்சாரம் என்பது இந்த ஆராய்ச்சியின் உபரியாகவே உற்பத்தி செய்யப்படும்.
...
அணு உலை செயல் படும் பொழுது இயல்பாக ஏற்படும் கதிர்வீச்சினால் சுற்றி யுள்ள கிராம மக்கள் தொண்டை வீக்கம், நாக்கு வீக்கம், நரம்பு கோளாறு போன்றவைகளால் பாதிக்கப் படுவர். ஆண்களின் விந்தணு சுரப்பி பாதிக்கப்பட்டு ஆண்மையின்மை ஏற்படும்
.பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டு மலட்டு தன்மை ஏற்படும் .
புற்று நோய் உட்பட பல்வேறு விதமான உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும் . புற்று நோய் என்றால் உங்களுக்கே தெரியும். அதிகப்படியான வலியும், நோவும், வேதனையும் பொருளாதார செலவையும், ஏற்படுத்தி குடும்பத்துள் ஏனைய உறுப்பினர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஒரு முறை வந்து விட்டால் பரம்பரை நோயாக மாறி அவர்கள் வாரிசுகளுக்கு கடத்தப்படுகிற நோய் இது.
மரபணு பாதிக்கப்படுவதால் பிறக்கும் குழந்தைகள் உடல் குறைப்பாட்டுடன் பிறக்கும் .
விவசாய உற்பத்தி பொருட்கள் உடனடி நஞ்சாக நாட்பட்ட விஷயமாக மாறும் . வயல்வெளிகள், நெற்கதிர்கள், காய்கறிகள், மரங்கள், செடி கொடிகள் காய் கனிகள், அனைத்தும் நஞ்சாகும். கடல் வாழ் உயிரினங்கள் வாழு நிலை பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். கடல் வாழ் உயினங்களை உண்பவர்களும் பாதிக்கப்படுவர்.
அணு உலை இயங்க துவங்கி 40 ஆண்டுகளுக்குள் ஏற்படக் கூடிய பாதிப்புகள் இவை .
வழி வழியாக நமது வழித் தோன்றல்கள் அனைவரும் உடல் குறைப்பட்டுடன் கூடிய பாதிப்பிற்கு உள்ளாவார்கள் .
அணு உலை எந்த வித சிக்கலும் இல்லாமல் இயங்கினாலே இப்படி !
வெடித்து விட்டாலோ, அல்லது கசிவு ஏற்பட்டு விட்டாலோ, உடனடியாக சுற்றியுள்ள பல லட்ச மக்கள் மூன்று நிமிடங்களுக்குள் மரணமடைவர். மற்றவர்கள் கண், காது, தொடை மண்டலம், நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகி உடல் ஊனமடைவர். மீள முடியாத அளவுக்கு நடை பிணமாவர். திருமணம் முடிக்க தகுதி அற்றவராவர். சுற்றி வெளி அடித்து அங்கேயே இருத்தப்படுவர். மற்ற மனித சமுதாயத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவர். உலக நாடுகள் பாவப்படுத்தபட்ட சமுதாயமாகப் பார்த்து, அவ்வப்போது வந்து பிச்சை இடுவர். இது தான் இன்று ஜப்பானில் நடப்பது.
நமக்கும் தேவையா இது? மின்சாரம் தேவைதான். மின்சாரம் தயாரிக்க ஆயிரம் வழியிருக்கிறது. அதை விடுத்து அணுஉலை மூலம் தான் மின்சாரம் தேவை என்பது .... சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால், தாயைக் கூட்டிக் கொடுத்து, மனைவியை கூட்டிக் கொடுத்து, பெற்ற மகளைக் கூட்டிக் கொடுத்து சம்பாதிப்பது போன்றது .
எந்த ஒரு விஷ்யத்துக்காகவும் இதுவரை ஒன்று கூடி கூட்டம் போடாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அணுவுலையை ஆதரிக்க ஒன்று கூடுகிறார்கள் என்றால், இவர்களுக்கு இன்றைய அரசியல் சம்பாத்தியம் இதில் தான். இவர்கள் மக்களிடம் தோற்றுப் போனார்கள். பதவிகள் போய் விட்டன. சம்பாதனை எப்படி... வரும்படி போய் விட்டதே ... ஆகவே இப்போது அணுவுலையை ஆதரிப்பதன் மூலம் பணம் பண்ணுகிறார்கள்.
பாதுகாப்பான அணுவுலை என்கிறார்கள். இதுவரை தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கடலில் கொல்லப்பட்ட போது என செய்தார்கள். ? இன்று வரை அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதை போய் டெல்லியில் தட்டிக் கேட்க வக்கு இல்லை இவர்களுக்கு .. டெல்லி சொல்வதை மட்டும் இங்கே வந்து சொல்கிறார்கள். டெல்லி அணுவுலையை ஆதரிக்க சொல்கிறது. அதை இங்கே செய்கிறார்கள்.
மத்திய மின்சாரத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு காங்கிரஸ் அரசு மின்சாரம் இதுவரை வழங்கவில்லை. அதை வழங்கினாலே பெருமளவு பிரச்சினை சரியாகும். தானே' புயல் வந்து இரண்டாம் மாதமாகிறது. இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. அங்கே மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவியாய் தவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் எடுத்து செய்யாத மத்திய அரசு அணுவுலை விஷயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருப்பதன் காரணம் என்ன?
இந்தியாவில் இத்தனை அனுவுலைகளை நிறுவுவது என்று பன்னாட்டு முதலைகளுடன் ஒப்பந்தம் போட்டு காசு வாங்கி விட்டார்கள். அதை எப்படியாவது நிறைவேற்ற வில்லையென்றால் அந்த முதலாளி கொடுத்தப் பணத்தை திரும்பக் கேட்பான். எனவே கமிஷன் காங்கிரஸ் அரசு இத்தனை துடிதுடிக்கிறது. இதில் மக்கள் நலன் எங்கே வந்தது.?
இன்று மின்சாரம் வந்து விட்டால் வியாபாரங்கள் நடக்கும், காசு வரும், வசதி வரும், வீடு வரும், மாடு வரும். ஆனால் தீராத நோய் வந்து விட்டால் ஈட்டிய காசையெல்லாம் கொட்டிக் கொடுத்ததும் தீராத நோயும், சந்ததி தாண்டி செல்லும் அணுகதி வியாதிகளும் வந்து விட்டால் என்ன செய்வீர்?
சிந்திக்க வேண்டும்.... இந்த இடத்தில் ...
No comments:
Post a Comment