Like me

Sunday, April 1, 2012

உதயகுமார் தனது குடும்பத்தின் சொத்து விவரங்களை புதன்கிழமை வெளியிட்டார்.


திருநெல்வேலி, மார்ச் 7: 







கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தனது குடும்பத்தின் சொத்து விவரங்களை புதன்கிழமை வெளியிட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருங்கிணைப்பாளராக எஸ்.பி. உதயகுமார் செயல்படுகிறார்.
போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுகளைப் போராட்டக் குழுவினர் மறுத்து வருகின்றனர். எந்த வெளிநாட்டில் இருந்தும் நிதியுதவி வரவில்லை. மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் அளிக்கும் நன்கொடை மூலம்தான் போராட்டம் நடைபெறுவதாக போராட்டக் குழ...ுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.பி. உதயகுமார் தனது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை புதன்கிழமை வெளியிட்டார். விவரம்:
வருமானம்: விவசாய நிலம் மூலம் கிடைத்த வருமானம், உதயகுமார், அவரது மனைவி மீரா ஆகியோர் கருத்தரங்குகளில் பேசியது, ஆசிரியர் பணியாற்றியது, ஆராய்ச்சி மற்றும் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியது ஆகியவை மூலம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே தந்தை வழியில் வந்த 5 சென்ட் நிலம். தாய் வழியில் வந்த 7.5 சென்ட், திருப்பதிசாரத்தில் உள்ள 14 சென்ட் நன்செய் நிலம்.
விலைக்கு வாங்கிய நிலங்கள்:
26.3.94: 10 சென்ட் நிலம்-நாகர்கோவில் அருகேயுள்ள கிராமத்தில்.
21.12.94 முதல் 30.3.2000 வரை: 3.76 ஏக்கர், நீண்டகரை கிராமத்தில்.
1.7.98 முதல் 23.3.99 வரை: 8.435 ஏக்கர் நிலம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில்.
9.9.05: 7.5 சென்ட் நிலம், வீடு, நாகர்கோவிலில்.
2.5.08: 91 சென்ட் நிலம், அழகியபாண்டியபுரத்தில்.
நாகர்கோவிலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதயகுமார் பெயரில் ரூ. 4953.84, இடலாக்குடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 1703.05.
நாகர்கோவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அவரது மனைவி மீரா பெயரில் ரூ. 1380.72, இடலாக்குடி தனியார் வங்கியில் ரூ. 309.
கோட்டாரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 2,331 பணம் கையிருப்பில் உள்ளது.
உதயகுமாரின் சாக்கர் அறக்கட்டளை பெயரில் கோட்டாறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ரூ. 5716.07, சாக்கர் மெட்ரிக் பள்ளி பெயரில் மீனாட்சிபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ரூ. 12,632.
உதயகுமாரின் தந்தை பெயரில் ரூ. 714.19, தாய் பெயரில் ரூ. 35,566.26 பணம் வங்கிக் கணக்கில் கையிருப்பில் உள்ளது.
கடன்கள்: உதயகுமார்,அவரது மனைவி பெயரில் வங்கிகளில் ரூ. 5.97 லட்சம் நகைக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், வங்கி டெபாசிட்டில் ரூ. 50 ஆயிரம் கடன் பெறப்பட்டுள்ளது.
கூடங்குளம் போராட்டத்துக்காக பெறப்படும் நிதி-செலவுகள் குறித்த விவரங்களை இடிந்தகரையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு கவனிக்கிறது.
எனவே, நான் எந்த நிதியையும் பெறவும் இல்லை, அதைக் கையாளவும் இல்லை. அதை நிரூபிக்கவே சொத்து விவரங்களை வெளியிடுகிறேன் என்றார் அவர்.


" அணு உலைக்காதலன் நாராயனசாமியே இதேபோல் உனது சொத்து கணக்கை வெளியிட வேண்டும் .
விவரத்தை அறிவிப்பார்களா?"

No comments:

Post a Comment