Like me

Tuesday, April 3, 2012

கொத்துக்குண்டு, நச்சுக்குண்டுகளின் சிதறல்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் படையினர்!




கொத்துக்குண்டு, நச்சுக்குண்டுகளின் சிதறல்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் படையினர்!

வன்னியில் சிறீலங்காப்படையினரின் தமிழின அழிப்பின் போர் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டுவந்த கொத்துக்குண்டுகள் மற்றும் நச்சுக்குண்டுகள் போன்ற பன்னாட்டு சட்டவிதிக்குஅமைவாக தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவித்ததை உறுதிசெய்யும் சிதறல்துண்டங்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
சிறீலங்காப்படையினரின் போர்நடவடிக்கையில் ஆட்லறி எறிகுண்டுஊடாக கொத்துக்குண்டுகளையும,; எரிகுண்டுகளையும்,டாங்கிகளில் இருந்து நச்சுக்குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளமை வன்னிப்பபோனின் போது காயம் அடைந்த மக்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.தடைசெய்யப்பட்ட குண்டுகளை பயன்படுத்தி தமிழ்இனஅழிப்பினை மேற்கொண்ட சிறீலங்காப்படையினர் இந்தகொத்துக்குண்டு தாக்குதலிலேயே வன்னியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை போரின் இறுதிவரை நின்ற படைதுறைசார் போராளிகள்,மற்றம் பொதுமக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளமை இதேபோல் சிறீங்காப்படையினர் வீசிய ஒரு குண்டில் பெருமளவான கால்நடைகள் இறந்து கிடப்பதை கீழ் காணும் ஒளிப்படம் காட்டிநிக்கின்றது.வன்னியில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட கொத்துக்குண்டுகளையும் வானில் இருந்து பரசூட்மூலமும் கொத்துக்குண்டுகளை வீசி தமிழ்மக்களை அழித்தார்கள்.
வன்னியில் போர்நடந்தஇறுக்கமான காலகட்டங்களில் டாங்கிகளில் இருந்து நச்சுக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள் இவ்வாறான தாக்குதல்களில் காயம் அடைந்த எத்தனையோ தமிழ்மக்கள் இன்றும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.இவற்றிற்கு மேலாக வானில் இருந்து வீசப்படும் ஜநூறுகிலோ,ஆயிரம்கிலோ கொண்ட குண்டுகள் நிலத்தில் வீழ்ந்துவெடித்தில் சிறியகுளத்தினை கூட உருவாக்கிஇருக்கின்றது.இவ்வாறு வன்னியில் படையினர் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் மேலும் வெளிவரத்தொடங்கியுள்ளது.

வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அண்மையில் கொத்துக்குண்டுகளின் சிதறல்களை மீட்டுள்ளார்கள் இவ்வாறு மீட்கப்படும் தடைசெய்யப்பட்ட குண்டுகள் தொடர்பாக வெளியில் செய்திகள் செல்லக் கூடாது என்று கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்களுக்கு சிறிலங்கா படையினர் மிரட்;டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு மீட்கப்படும் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகள்,கொத்துக்குண்டுகளின் சிதறல்களை அடையாளம் தெரியாத குண்டுகளின் சிதறல்கள் என்று வெளியில் சொல்லவேண்டும் என்று கண்ணிவெடிஅகற்றும் பிரிவினருக்கு படையினர் அறிவித்துள்ளார்கள்.
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுடன் படையினரின் கண்ணிவெடி செயற்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு இவ்வாறான சிதறுதுண்டுகளை மூடிமறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சலைப் பகுதி நாகர்கோவில் பகுதி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் ஆகியவற்றில் மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஹலோ ட்றஸ்ற் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது,டி.டி.ஜி நிறுவனமானது தெல்லிப்பளை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றி வருவதாகவும் டாஸ் நிறுவனம் கிளிநொச்சி மற்றும் கண்டாவளைப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் நாள்தோறும் எடுக்கும் வெடிபொருட்களை படையினர் பார்வையிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment