Like me

Tuesday, September 11, 2012

முதல்வரிடம் இடிந்தகரை குழந்தைகள் மனு.....




மனசாட்சியுள்ள இதயங்களை இறுதியாக தட்டுகிறோம்! எங்களின் கூக்குரல் உங்கள் காதுகளில் விழுகிறதா?

குழந்தைகளின் வேண்டுகோள் :

போராட கற்றுத்தந்த அரசுக்கு நன்றி...

பாடப்புத்தகத்தை கையில் சுமந்து செல்லும் வயதில்.. இப்படி போராட்டத்திற்கான குறிப்பு புத்தகத்தை கையில் ஏந்த வைத்த அரசுக்கு நன்றி...

நீங்கள் சுதந்திரமாகவும்... சந்தோசமாகவும்...நோய் இல்லாமலும் அனுபவித்த.... அனுபவிக்க போகும் அந்த வாழ்க்கையை நாங்களும் அனுபவிக்க வேண்டாமா..???

எங்களிடமிருந்து இவை அனைத்தையும் பிடுங்கிவிட்டு நீங்கள் மட்டும் வாழ நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்...???

நாங்கள் சாதிக்க வேண்டிய சாதனைகள் எவ்வளவோ காத்திருக்கிறது....எங்களை மருத்துவ அறையில் அமர்த்திவிட்டு நீங்கள் ஆட்சி அறையிலும்... உங்கள் குழந்தைகளை பள்ளி அறையிலும் அமர்த்த நினைப்பது ஏந்த விதத்தில் நியாயம்...????

எங்கள் பார்வையின் அர்த்தம் இன்னுமா உங்களுக்கு புரியவில்லை??? அது சொல்லுமே ஆயிரம் அர்த்தங்கள்....

உங்கள் குழந்தைக்கு சிறிய பிரச்சினை என்றால் துடிக்கும் உங்கள் மனது.... நாங்கள் அனுபவிக்கபோகும் கஷ்டங்களை நினைத்து எங்கள் தாயும் துடித்துபோவாள் என்று ஏன் நீங்கள் நினைக்கவில்லை..???

உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போது நீங்கள் அடைந்த வலியைதானே... என்னை பெற்றவளும் அடைந்திருப்பாள்...

எங்களை தெய்வத்துடன் ஒப்பிட்டு பேசிய நீங்கள்... இப்போது எங்களை மனிதர்களாககூட பார்க்காதது ஏன்???

இறந்த பின்பு உடல் உறுப்புகள் தானம் செய்யசொல்லும் நீங்கள்... அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட எங்கள் உறுப்புகளை நாங்கள் நினைத்தாலும் மற்றவருக்கு கொடுக்கமுடியாத நிலைமைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்....

தீ சுடும் என்று... அதில் கை வைத்ததினால் கற்றுக்கொண்டேன்... இனி அதில் ஒருபோது கை வைக்ககூடாது என்றும்... மற்றொன்றும் கற்றுக்கொண்டேன் இதை மற்றவருக்கும் கற்றுகொடுக்க வேண்டும் என்று...

அணுவின் பாதிப்புகள் பற்றி...எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்லியும் நீங்கள் எதற்க்காக அதை ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள்...????

உங்கள் உடம்பில் வியர்வை துளிகள் வராமல் இருக்க... எங்கள் கண்களில் கண்ணீர் துளிகள் வர வேண்டுமா...????

நீங்கள் குளிர்க் காற்றை அனுபவிப்பதற்காக.... நாங்கள் குழிக்குள் போக வேண்டுமா....????

நீங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதற்கும்... தொலைபேசியியல் பேசுவதற்கும்... நாங்கள் தொலைந்து போக வேண்டுமா...???

சாப்பிடும் முன்பு கைகளை கழுவிய பின்பே சாப்பிட வேண்டும்... ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கிறது என்று சொல்லித்தந்த நீங்கள்.... அணுவிலிருந்து வரும் கதிர்வீச்சில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று உங்களால் சொல்லமுடியுமா.... ???? அப்படிப்பட்ட சத்துக்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா...???






















No comments:

Post a Comment